1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி(SSLC) என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
வழக்கம் போல மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டம் மொத்தம் தேர்ச்சி பெற்ற விகிதத்தில் முதலிடத்தில் உள்ளது. திருப்பூர் மாவட்டம் இரண்டாவது இடத்திலும் பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியையும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் 20ம் தேதி முடிந்தது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுகளில் ஆங்கிலம் பாடத்தின் தேர்வில் கேட்கப்பட்ட மூன்று ஒரு மதிப்பெண் வினாக்களுக்கும், ஒரு 2 மதிப்பெண் வினாவிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தமிழகத்தில் மே 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ மாணவிகள் அனைவரும் தங்களின்  மதிப்பெண்களை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.