வெளியானது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முதல் 2 இடங்களை பிடித்த மாவட்டங்கள்!

Photo of author

By Sakthi

10 மற்றும் 12ஆம் வகுப்பு களுக்கு பொதுத் தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது கடந்த மே மாதம் நடைபெற்ற இந்த பொதுத் தேர்வின் முடிவுகள் இதற்கு முன்பே கடந்த 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 17 ஆம் தேதி வெளியிடப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

பிறந்தநாள் அன்றைய தினமே திடீரென்று பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 20 ஆம் தேதி அதாவது இன்றைய தினம் ஒரே கட்டமாக 2 வகுப்புகளுக்கும் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது.

அதனடிப்படையில், தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

அதனடிப்படையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து கன்னியாகுமரி மாவட்டம் 97.22% தேர்ச்சி பெற்றிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து 97.12 சதவீத தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடமும், 95.96 சதவீத தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்திருக்கிறது.

அதேசமயம் 10ம் வகுப்பில் 79.87 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது என்றும், சொல்லப்படுகிறது.