அதிமுக அலுவலகத்தில் இருந்து காணாமல் போன 113 ஆவணங்கள் மீட்பு! சிபிசிஐடி காவல்துறையினர் தகவல்!

Photo of author

By Sakthi

அதிமுக அலுவலகத்தில் இருந்து காணாமல் போன 113 ஆவணங்கள் மீட்பு! சிபிசிஐடி காவல்துறையினர் தகவல்!

Sakthi

Updated on:

அதிமுகவின் அலுவலக கலவர வழக்கில் எடுத்து சென்றதாக தெரிவிக்கப்படும் 113 ஆவணங்களும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் வரவேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தின் போது ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர் களுக்கிடையே மோதல் உண்டானது. இதில் பன்னீர்செல்வத்திற்கு எதிராக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 4 கலவர வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை சிபிஐ அல்லது வேறு அமைப்புகளுக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து நான்கு கலவர வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டன என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி மாற்றப்பட்ட பிறகும் விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை, குற்றச்செயல் நடைபெற்ற இடத்தை பார்வையிட வில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு வழங்கினார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்.

ஆகவே சிபிசிஐ காவல்துறையினர் இருதரப்பினரின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் போன்றோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருதரப்பினருக்கும் சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியும் விசாரணை செய்தனர்.

இப்படியான நிலையில் அதிமுகவின் தலைமை அலுவலக கலவர வழக்கில் எடுத்துச் சென்றதாக சொல்லப்படும் 113 ஆவணங்களும் மீட்க பட்டு விட்டதாக இன்று சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள் இதில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து எல்லா ஆவணங்களும் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட அனைத்து விதமான ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவின் அலுவலகத்தில் கலவரம் நடைபெற்ற போது உண்டான சேதங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்டார்.