மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம்! ரத்து செய்யப்படுமா 11 ஆம் வகுப்பு பொது தேர்வு?

0
125

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டமானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, உள்ளிட்டவற்றின் துணைச் செயலாளர் பங்கேற்றுக் கொண்டார்கள்.

இதில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக இயங்கி வரும் பள்ளிகளில் இதுவரையில் 25,000க்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட வேண்டியுள்ளது. இந்த கழிவறைகள் கட்ட இடமிருந்தும் தேவையான நிதிகள் ஒதுக்கப்படாமலிருக்கிறது.

அதோடு பள்ளிக்கல்வித்துறையில் 13,000 ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க வேண்டியிருக்கிறது. தற்காலிக ஆசிரியர் இடங்களை நிரப்பவும் அரசிடமிருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாமலிருந்து வருகிறது.

அந்த விதத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய இயலாத சூழ்நிலையை தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கின்ற நிலையில், ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே 11ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளில் முழுமையான பாடங்கள் நடத்தப்படாமலிருந்து வருகிறது. எனவே 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என்றும், கூறப்பட்டுள்ளது.

Previous articleகள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கு! தாளாளர் உட்பட 5 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!
Next articleமீண்டும் கேப்டனாக தாதா கங்குலி… அவர் அணியில் இடம்பெற்ற இந்திய வீரர்கள்