திருமணத்திற்கு இந்தப் பொருத்தம் அவசியமா?

Photo of author

By Sakthi

திருமணம் பொருத்தம் என வந்துவிட்டாலே ஜாதகத்தில் நட்சத்திரப்பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தம் ரஜ்ஜூப் பொருத்தமாகும். திருமணமான தம்பதிகள் பல்லாண்டு காலங்கள் எந்த குறையுமில்லாமல் வாழ மாங்கல்ய பொருத்தம் எனும் திருமண பொருத்தம் மிகவும் அவசியம். இது ஆயுளைப் பற்றி கூறும் பொருத்தமாகும்.

தசவிதப் பொருத்தங்களில் அனைத்து பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜுப்பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக பார்க்கப்படுகின்ற ரஜ்ஜு பொருத்தமில்லாத பலரது வாழ்க்கை சிறப்பாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ரஜ்ஜு பொருத்தம் இல்லாதவர்கள் , 8ம் இடத்துடன் சம்பந்தமும் கொண்டிருக்கும் கிரகங்களின் தசா புக்தி காலங்களில் மட்டுமே அசுப பலன்களை சந்திக்கிறார்கள், மற்ற காலங்களில் சிறுசிறு மனதாபங்கள் மட்டுமே வருகிறது என சொல்லப்படுகிறது.