வெளியான 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! மாற்றுத் திறனாளிகள் 3923 பேர் தேர்ச்சி!!
இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பொதுத் தேர்வை எழுதிய மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுள் 3923 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 8.17 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதையடுத்து இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். தேர்வு எழுதியவர்களில் 94.30 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகளும் கிடைத்துள்ளது. இந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 4398 மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகள் எழுதினர். அதில் 3923 மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அது போல பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 90 சிறைவாசிகளில் 79 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.