130 குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒரே காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதி! தீடீர் உடல் நலக்குறைவு!

Photo of author

By Hasini

130 குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒரே காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதி! தீடீர் உடல் நலக்குறைவு!

மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கின் காரணமாக 130 குழந்தைகள் அந்த மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதன் காரணமாக மேல் சிகிச்சைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை உருவாக்கலாம் என அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது ஜல்பைகுரி மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் அந்த குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நமக்கு ஏதாவது என்றால் கூட தாங்கிக் கொள்ளலாம் ஆனால் குழந்தைகளுக்கு என்றால் நினைத்து பாருங்கள் யாராலும் தாங்கி கொள்ளவே முடியாது. அப்படி ஒரு நிலைதான் தற்போது ஏற்பட்டு உள்ளதோ என நினைக்கும் படி ஒரே நேரத்தில் இவ்வளவு குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.