தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யுமாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
191

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழகத்தில் இன்றைய தினம் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. நாளைய தினம் மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

வரும் 17ஆம் தேதி வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்! முதன்முதலாக தொடங்கி வைத்தார் தமிழகத்தின் முதலமைச்சர்!
Next articleஎந்த சாதியினரும் அர்ச்சகராகலாம்! அண்ணாவாக திகழும் முக.ஸ்டாலின்!