தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தற்போது 14½ லட்சம் புதிய உறுப்பினர்கள்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தற்போது 14½ லட்சம் புதிய உறுப்பினர்கள்!

வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளர்கள் தான் சம்பாதிக்கும் சம்பளத்திலிருந்து ஒரு சிறு தொகையை வேலை செய்யும் நிறுவனத்தினால் பிடித்தம் செய்யப்படும். இது அவர்களது கடைசி காலத்தில் அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசினால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.

ஒவ்வொருவர் எப்படி சம்பளம் வாங்கினாலும் அதில் இருந்து 12 சதவிகிதம்  நிறுவனத்தினால் சேர்த்து வைக்கப்படும். இதில் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் 3.3 சதவீதம் வைப்பு நிதியாகவும், மீதமுள்ள பணம் பென்சன் ஆகவும் அவர்கள் வாங்குவார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு இருந்தாலும் அதிலிருந்து 12 சதவிகிதம் பிடித்தம் போக அவர்களுக்கு கைகளில் சம்பளம் கொடுக்கப்படும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 14 லட்சத்து 65 ஆயிரம் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பள பட்டியல்  அடிப்படையில் வைப்பு நிதி அமைப்பு இந்த தகவலை கூறியுள்ளது. மேலும் இது தற்காலிக எண்ணிக்கைதான் என்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் துல்லியமான எண்ணிக்கையைத் தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 11 லட்சத்து 15 ஆயிரம் புதிய உறுப்பினர்களும், அதற்கு முன் மே மாதத்தில் 6 லட்சத்து 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கூறி உள்ள கணக்கு ஜூலை மாதம் சேர்ந்த உறுப்பினர்களின்
எண்ணிக்கை மட்டுமே ஆகும்.

Leave a Comment