என் வாழ்வாதாரத்தை மீட்டுத்தாருங்கள்! டிஜிபியிடம் கண்கலங்கி புகார் அளித்த 14 வயது சிறுமி!

Photo of author

By Sakthi

ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 14 வயது சிறுமி உயிரிழந்த தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான டிராக்டர், கலப்பை, போன்ற உடைமைகளை மீட்டுத்தருமாறு தமிழக காவல்துறை இயக்குனரை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டம் வைராபாளையம் பகுதியைச் சார்ந்தவர் சிறுமி தர்ஷனா இவர் தன்னுடைய தந்தையின் உடைமைகளை மீட்டுத் தரவேண்டும் என்று தெரிவித்து தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு நேரில் சந்தித்து புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அந்த புகார் மனுவில் என்னுடைய சொந்த ஊரான கருவூரில் இருக்கின்ற ஓம் அந்த ஊரில் என்னுடைய தாய் தந்தை வசித்து வந்தார்கள். கடந்த 2014ஆம் வருடம் என்னுடைய தந்தை உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். என்னுடைய தந்தைக்கு சொந்தமான டிராக்டரை என்னுடைய தந்தையின் அக்கா மகன் பூபாலன் என்பவர் கந்து வட்டி என்ற பெயரில் பல தில்லுமுல்லு வேலைகளை பார்த்து டிராக்டரை எடுத்துச் சென்று மறைத்து வைத்து விட்டார் என தெரிவித்திருக்கிறார் அந்த சிறுமி.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தேன் ஆனாலும் அவர்கள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்கள். கடந்த 8 மாத காலமாக பூபாலன் என்பவரால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். இறந்துபோன என்னுடைய தந்தையின் மீது பொய்யான கணக்குகளை துண்டு சீட்டில் எழுதி வைத்துக்கொண்டு என்னையும் என்னுடைய பாட்டியையும் மிகவும் தரக்குறைவாக அவர் வசைபாடி வருகிறார்.

தன்னுடைய சுயநலத்திற்காக வாங்காத கடனுக்கு என்னுடைய தந்தையின் மீது வீண் பழி சுமத்தி வருகிறார். என்னுடைய வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அவரிடம் இருக்கின்ற என்னுடைய தந்தையின் டிராக்டர் இருசக்கர வாகனம் கலப்பை நகை அடகு சீட்டு ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை மீட்டுத் தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அந்த சிறுமி அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.