இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமூலங்கை நிலைநாட்டும் விதத்தில் போராட்டம் பொது மக்களிடையே பெரும் சர்ச்சை, கலவரம், உள்ளிட்டவை ஏற்படும் காலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த விதத்தில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை, நாளை மறுநாள், செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. அதேபோல அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது.
ஆகவே இந்த காலகட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும், செப்டம்பர் மாதம் 9ஆம் தேதியான இன்று முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் ஜானி டாம் வர்கீஸ் பிறப்பித்திருக்கிறார். இது போன்ற காலகட்டங்களில் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரையிலும், அக்டோபர் மாதம் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும், வெளி மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள் சரக்கு வாகனங்கள்,ட்ராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் நினைவிடங்களுக்கு வருகை தரவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு நினைவிடங்கள் அமைந்திருக்கின்ற பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஜோதி எடுத்து வரவும், அஞ்சலி செலுத்தவும், மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற வேண்டும்.
வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று மட்டுமே வர முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியாளர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.