சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு 500, பெண்களுக்கு 1500 என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட அரசு !!

Photo of author

By Preethi

சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு  500 பெண்களுக்கு 1500 என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட அரசு !!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் பெண்களுக்கு 1500 என பல்வேறு சலுகைகளை காங்கிரஸ் அரசு தனது தேர்தல் வாக்குறுதியில்  அறிவித்துவருகிறது .

ஏனெனில் மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு  இறுதியில் தேர்தல் நடைபெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில்  காங்கிரஸ் நடத்திய  பொது குழு கூட்டத்தில் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை  வழங்குவோம். இதுபோல இன்னும் பல திட்டங்களை  செய்ய போகிறோம் என்றும் பாஜக போன்று நாங்கள் மாதம்தோறும் ஊழல் செய்ய மாட்டோம் என்றும் கூறினார். பாஜகவை பற்றி  மேலும் பல குற்றச்சாட்டுகளை கூறி  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பெண்களுக்கு நன்மை தரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு  500 ரூபாய் தருவோம் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.

தேர்தல் தீவிர பிரச்சாரத்தின்  போது  பிரியங்கா காந்தி   மத்திய பிரதேசத்தில் உள்ள அனைவருக்கும் 100 யூனிட்  மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் விவசாய கடன் தள்ளுபடி மற்றும் இதுபோல இன்னும் பல அதிரடி அறிவுப்புகளை அறிவித்துள்ளார். அடுத்ததாக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறை படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ளது.