இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு சற்றே அதிகரிப்பு!

Photo of author

By Sakthi

நோய்த் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதன் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு நேற்று முன்தினம் நோய் தொற்று பாதிப்பு 13405 ஆக இருந்த சூழ்நிலையில், நேற்று சற்று அதிகரித்திருக்கிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,67,031 ஆக அதிகரித்தது.

தினசரி நோய் தொற்று பாதிப்பு விகிதம் 1.28 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் மற்றும் 1.80 சதவீதமாகவும், பதிவாகியிருக்கிறது.

இந்த நிலையில், நேற்றைய தினம் கேரளா மாநிலத்தில் 5691 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மிசோரம் மாநிலத்தில் 1295பேரும், மகாராஷ்டிராவில் 1080 பேருக்கும் இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நோய் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழே தான் இருக்கிறதாம்.

கேரள மாநிலத்தில் இந்த நோய்த்தொற்று பாதிப்பால் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 130 பேர் உட்பட நாடு முழுவதும் மேலும் 278 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 5,12,622என அதிகரித்திருக்கிறது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 31,327 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இதுவரையில் குணமடைந்தவரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,21,89,887என அதிகரித்திருக்கிறது.

தற்சமயம் 1,64,522பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இது நேற்று முன்தினத்தை விட 16,553 குறைவு என சொல்லப்படுகிறது.

நாடு முழுவதும் நேற்று 33,844தவனைகளும் இதுவரையில் 176,19 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று 11,83,418 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பரிசோதனை 76.24 கோடியாக அதிகரித்திருக்கிறது.