16-7-2022- இன்றைய ராசிபலன்கள்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தாங்கள் வகுத்த திட்டங்கள் வெற்றி பெறும் நாள், சேவிக்குளிரும் செய்திகள் வந்து சேரும், கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள், தொல்லை கொடுத்தவர்கள் தற்போது தோள் கொடுத்து உதவ முன் வருவார்கள்.

ரிஷபம்

இன்று தங்கள் பம்பரமாக சுற்றி பணியாற்றும் நாள், உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும், நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும், தொழில் ரீதியாக பங்குதாரர்களுடன் முக்கிய முடிவுகளை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்

இன்று தாங்கள் கொடுத்த காக்கை காப்பாற்றிய மகிழ்ச்சியடைவீர்கள், பணிச்சுமை அதிகரிக்கும் பரிமாற்றத்தில் உண்டான மன வருத்தம் நீங்கும், வாரிசுகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

கடகம்

இன்று தாங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள், விரயங்கள் ஏற்படுகிறதே என கவலை ப்படுவீர்கள். குடும்பச் சுமை அதிகரிக்கும் முக்கிய வேலைக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரலாம்.

சிம்மம்

இன்று தங்களுக்கு இனிமையான நாள், இல்லத்திலும், உள்ளத்திலும், அமைதி அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும், இனத்தார் பகை நீங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும், தொழிலில் விலகிச் சென்ற கூட்டாளிகள் விரும்பி வந்திணைவார்கள்.

கன்னி

இன்று தாங்கள் செலவுகளை சமாளிக்க வேண்டிய நாள், வியாபாரத்தை விரிவு படுத்த எடுத்த முயற்சி வெற்றிபெறும். அரசு வழித்தவைகள் அதிகரிக்கும் வாரிசுகள் வழியில் அருமையான செய்தி வந்து சேரலாம்.

துலாம்

இன்று தாங்கள் நிலையான வருமானத்திற்கு வழி செய்து கொள்ளும் நாள், வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள், அன்பான நண்பர்களின் ஆதரவு கிட்டும், உத்தியோகத்தில் உங்களுடைய கை ஓங்கும்.

விருச்சிகம்

இன்று வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள், வருமானம் திருப்திகரமாக இருக்கும், நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு வழிகெடுத்து தருவார்கள், குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு மனக்குழப்பம் நீங்கும் நாள், மதிப்பும். மரியாதையும், அதிகரிக்கும் சுணக்கத்துடன் இருந்த காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். அலட்சியலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

மகரம்

இன்று தாங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாள், பணப்புழக்கம் அதிகரிக்கும், அரசு சம்பந்தமான காரியங்கள் அனுகூலமாக முடிவடையும், நட்பு வட்டாரம் விரிவடையும், ஊக்குத்தோடும், உற்சாகத்துடனும், பணியாற்றுவீர்கள்.

கும்பம்

இன்று தங்கள் மீது பாசம் காட்டியவர்களின் நேசம் கிடைக்கும் நாள், உறவினர்களுக்காக செலவு செய்ய முன்வருவீர்கள் மனக்குழப்பம் நீங்க அருகிலிருப்பவர்களின் ஆலோசனை கை கொடுக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு காலை சமயத்தில் கவனம் தேவைப்படும் நாள், உத்தியோகத்திலிருக்கின்ற சூட்சுமங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும், வாரிசுகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.