சீனாவில் 16 பேர் உயிரிழப்பு! காரணம் இதுவா?

சீனாவில் 16 பேர் உயிரிழப்பு! காரணம் இதுவா?

உலக நாடுகளில் சீனாவில் மராத்தான் போட்டி நடைபெறுகிறது.

சீனாவின் கன்சூ மாகாணத்தில் பேயின் நகரின் சுற்றுலா தளத்தில் 100 கி.மீ தொலைவுக்கான மராத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது.இதில் மொத்தம் 172 பேர் கலந்து கொண்டனர்.

அதில் தீவிர தட்பவெட்ப நிலையின் காரணமாக 16 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.மேலும் 5 பேரை காணவில்லை என்று தேடி வருகின்றனர்.

இன்று அதிகாலை 3 மணி வரை ஓட்ட பந்தயங்களில் பங்கேற்றவர்களில் 16 பேரின் உடல்கள் தேடி எடுக்கப்பட்டு உள்ளது.

போட்டியில் பங்கேற்றவர்களில் 151 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.

இதனை தொடர்ந்து போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் அரசு அதிகாரிகள் காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.இதை தொடர்ந்து இரவானதால் தேடும் பணி சிக்கல் ஏற்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment