பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி குழந்தை பெற்ற விவகாரம்! சக மாணவன் போக்சோ சட்டத்தில் கைது

Photo of author

By Sakthi

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேவுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும், 3 வருடங்களாகப் பழகி வந்திருக்கிறார்கள். இப்படி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்த சூழ்நிலையில், சிறுமி கர்ப்பமாகியிருக்கிறார்.

இதற்கு நடுவே கடந்த வாரம் அந்த சிறுமி தன்னுடைய வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது பிரசவ வலி வந்து குழந்தை பிறந்திருக்கிறது. 12ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி குழந்தை பெற்றது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

இதுதொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் இதுகுறித்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அந்த சிறுவனை சேர்த்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு சிறுமி மற்றும் குழந்தைகள் இருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆனால் இதனைக் கேள்வியுற்ற 90களில் பிறந்தவர்கள் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. திருமண வயதை அடைந்த பின்னரும் கூட தங்களுக்கு இன்னமும் திருமணம் நடைபெறவில்லை.

ஆனால் 12ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் இப்படி ஒரு வேலையை பார்த்திருக்கிறான் என்று ஆதங்கம் தெரிவிக்கிறார்கள் 90களில் பிறந்தவர்கள்.