17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை! கிராம உதவியாளர் உட்பட இருவர் கைது!

Photo of author

By Sakthi

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று அவருக்கு தெரியாமல் மது வாங்கி கொடுத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியைச் சார்ந்த கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்த முருகேசன் மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை என்பது சம்பந்தப்பட்ட சிறுமைக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்ததை தொடர்ந்து முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர் காவல் துறையைச் சார்ந்தவர்கள்.

மற்றொரு குற்றவாளியான 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு காவல்துறையினரால் திருச்சியிலுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.