8 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்! மகளிர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

0
153

அரியலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து இவர் கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார் என்று சொல்லப்படுகிறது.

அதன்பிறகு அந்த சிறுமிக்கு முத்தம் கொடுத்தும், பாலியல் தொல்லையும் வழங்கியதாக அரியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூரிலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாரிமுத்துவுக்கு 17 வருடங்கள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு வழங்கி வழங்கியிருக்கிறார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சார்ந்தவர் தீனதயாளன் இவர் உடையார்பாளையம் பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்தார். குவாகத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் தன்னுடைய தந்தை எழுதிக் கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை திரும்ப கேட்டிருக்கிறார்.

அந்த பத்திரத்தை மறுபடியும் கொடுக்க வேண்டுமென்றால் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என சார்பதிவாளர் கேட்டிருக்கிறார். பணம் கொடுக்க விருப்பமில்லாத காமராஜ் அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் புகார் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி சார்பதிவாளர் தீனதயாளனிடம் காமராஜ் 4000 ரூபாய் பணம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சார்பதிவாளர் தீனதயாளனை கையும் களவுமாக கைது செய்தார்கள்.

இந்த வழக்கு அரியலூரிலுள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் தீனதயாளன் அவர்களுக்கு 3 வருடகால சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், விதித்து நீதிபதி சரவணன் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

Previous articleஉக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கும் அமெரிக்காவின் அதிபர் நெஞ்சார்ந்த நன்றி!
Next articleநாங்கள் ஒன்றும் துறவிகள் அல்ல எங்களுக்கும் பணிச்சுமை இருக்கும்! உச்சநீதிமன்ற நீதிபதி!