ஆப்பிரிக்கா கண்டம் தான்சானியாவில் பிரேஸிஸின் ஏர் என்ற தனியார் விமானம் 49 பயணிகளுடன் நேற்று பயணமாகி கொண்டு இருந்தது. இந்த நிலையில், பிகு நகரில் திரையரங்குவதற்கு 100 மீட்டர் தொலைவில் மோசமான வானிலை காரணமாக நிலை தடுமாறி ஆற்றில் இந்த விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விமானத்தில் 43 பயணிகள் மற்றும் ஊழியர்கள் 6 பேர் என மொத்தமாக 49 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். முதல் கட்ட தகவலின் படி ஏரியில் விழுந்த விமானத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ப்ரேஸிஸின் ஏர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் மீட்பு பணியை தீவிர படுத்தியிருப்பதாக தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.
பிகோப நகர மண்டல ஆணையர் ஆல்பர்ட் சலமில வழங்கிய தகவலின்படி ஏரியில் விழுந்த 24 பயணிகளை காப்பாற்றி இருக்கிறார்கள் .3 பேரை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள். அதோடு தொலைந்தவர்களை தேடும் பணியில் பல சடலங்களை மீட்கப்பட்டுள்ளன இதுவரையில் 19 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது மீட்புப் பணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு உலக நாடுகளை சார்ந்த மக்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சிறிய அளவிலான இந்த விமானம் பாதிக்கு மேல் நேரில் மூழ்கி நிலையில் கயிறு மூலமாக கரைக்கு இழுக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த பகுதி மீனவர்களும் ஏரியில் தொலைந்தவர்களை தேடி வருகிறார்கள். தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் இந்த சம்பவத்திற்காக தன்னுடைய இரங்கலை பதிவு செய்திருக்கிறார்.