19 வயது பையனுக்கு 55 வயது பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்! இதன் காரணமாக பையனுக்கு நடந்த அவலம்!

0
161
19 year old boy has an affair with a 55 year old girl! Shame on the boy for this!
19 year old boy has an affair with a 55 year old girl! Shame on the boy for this!

19 வயது பையனுக்கு 55 வயது பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்! இதன் காரணமாக பையனுக்கு நடந்த அவலம்!

தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பட்டியில் குணசேகரன் என்ற நபர் வாழ்ந்து வருகிறார். அவருக்கு சுரேஷ் என்ற 19 வயது மகன் உள்ளார். இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் 55 வயதுடைய லக்ஷ்மி என்ற பெண் ஒருவரும் வசித்து வருகிறார்.

நாளடைவில் அந்த பெண்ணுக்கும் சுரேஷ்க்கும் இருந்த பழக்கம் கள்ள காதலாக மாறி உள்ளது. இதை அறிந்த சுரேஷின் வீட்டில் கடுமையான எதிர்ப்புடன் சுரேஷை இந்த தொடர்பை கைவிடும்படியும் கூறி உள்ளனர்.

ஆனாலும் பெற்றோரின் பேச்சை கேட்காமல், அவர்கள் இருவரும் அந்த உறவை மறைமுகமாக தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 15 ம் தேதி அந்த லக்ஷ்மி என்ற பெண்ணின் முன்னாலேயே சுரேஷ் தூக்கில் தொங்கி உள்ளான்.

இதனை தொடர்ந்து , சுரேஷ் இறப்புக்கு காரணமான லட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தந்தையான குணசேகரன், பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஆனாலும் அவரது தந்தை அளித்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எதுவும்  எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக , நேற்று குணசேகரன் மற்றும் அவரது மனைவி பூங்கொடி ஆகியோர் தருமபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர்.

அந்த மனுவின் மூலம் அவர்கள் லட்சுமி என்ற அந்த பெண் தன் மகனை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டதாகவும், இந்த நிலையில் சுரேஷ் மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே, சுரேஷ் மரணத்திற்கு காரணமான லட்சுமி மீது,  அவரது மகன் இறந்ததற்கான உண்மை காரணம் கண்டுபிடுக்கவும், அவர்களின் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Previous articleட்விட்டர் நிறுவனம் மேல் பாய்ந்த போக்சோ!
Next articleதங்கையை 25 இடங்களில் வெட்டி கொன்ற கொடூர அண்ணன்! இப்படி ஒரு வன்மம்!