பயணிகளின் கவனத்திற்கு..தெற்கு ரயில்வே சார்பாக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!

0
20

பணி மற்றும் படிப்பிற்காக வெளியூரை சேர்ந்தவர்கள் சென்னையில் தங்கி வருகின்றனர். பண்டிகை காலம் கோடை விடுமுறை தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்வது வழக்கம்.

அவ்வாறு செல்லும் பொழுது பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. மேலும் ரயில்வே துறையின் சார்பாகவும் கூடுதல் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த ரயில்கள் இயக்கப்படுவதற்கு முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகும் நிலையில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு செய்து கொண்டு தங்களது பயணங்களை மேற்கொள்கின்றனர். டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடத்திலேயே முடிவடைவதால் பலரும் கடைசி நிமிடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

இந்நிலையில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க வார இறுதி நாட்களிலும் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது, இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த அறிவிப்பில் ஜூன் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 8.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.

அதன் பிறகு ஜூன் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நெல்லையில் இரவு 9:40 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 8 மணி அளவில் எழும்பூர் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெரிவித்துள்ளனர். அதனால் பயணிகள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டு பயணிக்கலாம்.

Previous articleகமலுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!! குண்டர்கள் வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது!!
Next articleபாஜக தவெக கூட்டணி அமையுமா? கொள்கை பரப்பு செயலாளரே சொல்லிட்டாரு!