இரண்டு தவணை தடுப்பூசிகளால் எந்த பயனும் இல்லை! பிரதமரின் எச்சரிக்கையால் பீதியில் மக்கள்!

Photo of author

By Sakthi

உலக நாடுகள் அனைத்தும் புதிய வகை நோய் தொற்று பரவல் காரணமாக, மிகப்பெரிய அச்சத்தில் இருக்கிறது. ஏனென்றால் தற்சமயம் கொரோனா நோய்தொற்று பாதிப்பிலிருந்து மெல்ல, மெல்ல, மீண்டு வந்த சூழ்நிலையில், அதி வேகமாக பரவும் தன்மை கொண்ட புதிய வகை நோய்த்தொற்று பரவல் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த விதத்தில் புதிய வகை வைரஸ் பரவலை அடுத்து இங்கிலாந்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் எடுத்திருக்கின்ற எச்சரிக்கையில் தெரிவித்திருப்பதாவது, விரைவில் புதிய வகை நோய் தொற்று அலை வீசும் அதனை தடுப்பதற்காக ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசிகள் இரண்டு தவளைகளும் இந்த புதிய வகை நோய்தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு வழங்காது.

இருந்தாலும் மூன்றாவதாக பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு குறையும் என்று அறிவியல் உலகம் தெரிவிக்கிறது. ஆகவே பொது மக்கள் எல்லோரும் ஒரு மாத காலத்திற்குள் இன்னொரு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தற்சமயம் அவசர நிலையில் உள்ளோம் இந்த புதிய வகை நோய் நோய் தொற்றுக்கு எதிராக நம்முடைய போராட்டம் ஆரம்பித்து விட்டது. இந்த சூழ்நிலையில், மூன்றாவது பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதுகாப்பு கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தாலும் இந்த புதிய வகை நோய்த் தொற்றானது தீவிரமானது கிடையாது என்று அவர்களால் ஊர்ஜிதம் ஆக கூறமுடியவில்லை.

முன்னரே நோய்த்தொற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இடையே புதிய வகை நோய்தொற்று மிகவும் வேகமாக பரவும் என்று விஞ்ஞான உலகம் நம்மை எச்சரித்து இருக்கிறது. புதிய பூஸ்டர் தவணை போடப்பட வேண்டும் என்றால் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது பூஸ்டர் தவணை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்க இருக்கிறது. அதாவது இரண்டாவது தவணை எடுத்துக் கொண்டவர்கள் அதனை எடுத்துக்கொண்டு மூன்று மாத காலம் ஆகியிருக்க வேண்டும். அவர்களுக்கு தான் இந்த போஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்த முடியும் என்று கூறியிருக்கிறார்.

நாடு முழுவதும் 42 ராணுவ குழு அனுப்பப்பட்டு தடுப்பூசி பணியை விரைவில் நிறைவேற்றுவோம் எனவும், போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கும்போது மூன்றாவது தவளை தடுப்பூசியை எடுத்துக்கொண்டால் 70 முதல் 75 சதவீதம் வரையில் புதிய வகை நோய் தொற்றில் இருந்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த புதிய வகை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் இந்த புதிய வகை நோய் தொற்று கேஸ்கள் 3 ஆயிரத்தை கடந்து இருக்கிறது.