1980- இல் 2 படம்! ரஜினி படம் சூப்பர் ஹிட், சிவாஜியின் இந்த படம் ஓடவில்லை! – SP முத்துராமன்!

0
572
#image_title

SP முத்துராமன் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. சிவாஜி, எம்ஜிஆர் ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் 60க்கும் மேற்பட்ட படங்களை எடுத்துள்ளார்.

 

இவர் சிறந்த இயக்குனர் என்ற பட்டத்தை 3 படங்களுக்கு இவருக்கு கொடுத்திருக்கின்றனர். புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது. இந்த மூன்று படங்களுக்கும் சிறந்த இயக்குனர் என்ற பட்டத்தை இவர் பெற்றார்.

 

 

1980களில் இவர் இரண்டு படங்களை இயக்கினார். அந்த இரண்டு படங்கள் ஒன்று ஜனவரி மாதம் வெளிவந்த ரிஷி மூலம் சிவாஜி கணேசன் மற்றும் கே ஆர் விஜயா நடித்து வெளிவந்தது இந்த படம். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

 

இந்த கதை சிவாஜி கணேசன் ஒரு பொய் சொல்லிவிட்டார் என்று தெரிந்ததால், கே ஆர் விஜயா அவரையும் அவரது மகனையும் விட்டுவிட்டு அவர் அப்பா வீட்டிற்கு சென்று விட்டார். பிறகு தனது பெயரை மாற்றி ஒரு சன்யாசியாக தனது மகனை வளர்த்து வரும் சிவாஜி கணேசன். ஒரு கட்டத்தில் பெரிய டென்னஸ் பிளேயராக வரும் மகனை பார்த்து மறுபடியும் ஒன்று சேர வேண்டும் என்று நினைக்கிறாள் கே ஆர் விஜயா. ஆனால் மகன் அம்மாவை வெறுக்கிறார். பிறகு எப்படி குடும்பம் ஒன்றானது என்பதை பற்றித்தான் இந்த கதை.

 

இந்த படம் அவ்வளவு வசூலை தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

அதற்குப் பின் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த முரட்டுக்காளை சக்க போடு போட்டது.

 

கொஞ்சம் இறைவழி விட்டிருந்த ஏவிஎம் ஸ்டுடியோ மறுபடியும் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் முரட்டுக்காளை படத்தை வெளியிட்டது.

 

இந்தப் படம் 200 நாட்களை தாண்டி நான்கு திரையரங்குகளில் வெற்றி படமாக நல்ல வசூலை ஈட்டியது. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. இந்தப் படத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்த வந்த ஜெய்சங்கர் இந்த படத்தில் வில்லனாக நடித்து கலக்கி இருந்தார்.

 

இந்தப் படத்தில் வரும் பாடல்கள் மிகவும் ஹிட் பாடல் ஆக அமைந்தது. இளையராஜா தான் இசை அமைத்திருந்தார். முதலில் வரும் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடல் இன்றளவுக்கும் ரஜினி ரசிகர்களிடையே மிகவும் ரசிக்கப்பட்டது என்று சொல்லலாம்.

 

இந்த இரண்டு படங்களுமே வெளிவந்த 44 ஆண்டுகள் ஆகியுள்ளது. 2012 ஆம் ஆண்டு முரட்டு காளையை மறுபடியும் ரிலீஸ் செய்தது குறி

ப்பிடத்தக்கது.

 

 

Previous articleஇந்த 13 App உங்க போன்ல இருக்கா! உடனே uninstall பண்ணுங்க! தகவல்களை திருடுகிறது!
Next articleதிடீரென்று குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! இந்த மாதம் முழுவதும் இதுதான் ரேட்!