ADMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளது. ஆனால் அதிமுகவில் தலைமை போட்டியே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இவர்கள் மூவரையும் கட்சியிலிருந்து நீக்கினார். இவர்கள் கட்சியிலிருந்தால் தலைமை பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தினால் இபிஎஸ் இந்த செயலை செய்துள்ளார் என்று பலரும் கூறி வந்தனர்.
இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக கட்சியின் மூத்த அமைச்சராக அறியப்பட்ட செங்கோட்டையனின் பதவிகளை பறித்தது மட்டுமல்லாமல் அவரை கட்சியிலிருந்து அடியோடு நீக்கிவிட்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அதிமுகவிலுள்ள முக்கிய அமைச்சர்கள் சிலர் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். கட்சியின் விதிப்படி, அதிமுக தலைமைக்கு எதிராக செயல்படுபவர்கள் மற்றும் கட்சியிலிருந்து நீக்க பட்டவர்களுடன் தற்போது கட்சியிலிருப்பவர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது.
செங்கோட்டையனின் நீக்கத்தின் போதும் இது தெளிவாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் செங்கோட்டையனுடன் தொடர்பில் உள்ள அமைச்சர்கள் யார் என்று வினவும் போது, சி.வி. சண்முகம், அன்பழகன், ஜெயக்குமார் என்பது தெரியவந்துள்ளது. ஏனென்றால் அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென்று கோரிக்கை வைக்க இபிஎஸ் வீட்டிற்கு செங்கோட்டையன் சென்ற போது, சி.வி.சண்முகம், அன்பழகன், உடனிருந்தனர். மேலும் ஜெயகுமார் அதிமுக-பாஜக கூட்டணியில் விருப்பமில்லாமல் இருப்பதால், இவரும் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.

