கடந்த 2019 ஆம் வருடம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா என்ற இடத்தில் விடுமுறை முடிந்து பணியில் இணைவதற்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்களை குறிவைத்து பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
இதில் பல இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். தமிழகத்தைச் சார்ந்த 2 ராணுவ வீரர்கள் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தார்கள்.
மேலும் நம் நாட்டு எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானத்தை துரத்தியடிப்பதற்காக சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தினால் பிடிக்கப்பட்டு அதன் பிறகு விடுவிக்கப்பட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக் எனப்படும் துல்லிய தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் முகாம் அதிரடியாக அழிக்கப்பட்டது.
அந்த விதத்தில் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருக்கின்ற ஜவா என்ற பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்குமிடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சார்ந்தவர் உட்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்து வருகிறார்கள்.