அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 2000 ரூபாய் பணம்:! நீட் பயிற்சிக்கான கட்டணமும் பள்ளியே ஏற்கும்!

Photo of author

By Pavithra

 

அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும்,நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணமும் பள்ளியே ஏற்கும் என்றும் அரசு பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 350 மாணவர்கள்,ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.கடந்த சில வருடங்களாகவே இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வந்தது.இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசுப் பள்ளி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் அவர்கள் கூறியவாறு:

பள்ளிகளில் ஆறாம் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி அரசு அளிக்கும் அனைத்து கல்வி உதவித் தொகையையும் மாணவர்களுக்கு விரைவில் பெற்றுத் தரப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சுத்தமான குடிநீர் சிறந்த நூலக வசதி கணினி வழி கல்வி போன்றவையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மாலை நேரத்தில் தடகள விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சியும் யோகா பயிற்சியும் அளிக்கப்படும் என்றும் அரசு பள்ளி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதுமட்டுமின்றி 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நீட் பயிற்சி தேர்வு எழுதுவதற்கான விண்ணப்ப கட்டணத்தையும் பள்ளியே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.