2026 ல் ஆட்சியை பிடிக்க திமுக மாஸ்டர் பிளான்!! போட்டுடைத்த சீமான்!!

Photo of author

By Sakthi

Seeman:2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமைத் தொகையை திமுக 2000 ஆக உயர்த்தும் என  சீமான் காட்டம்.

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வர் பதவியேற்ற உடன் ஐந்து முக்கிய திட்டங்கள் கையெழுத்திட்டார். அவற்றில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம்  என மகளிருக்கான திட்டங்கள் இடம் பெற்று இருந்தது. இதற்கு ஆதரவு எதிர்ப்பு என பல விமர்சனங்கள் எழுந்தது. மக்களுக்கு உரிமை தொகை வழங்கி விட்டு டாஸ்மாக்கை திறந்து வைத்து அந்த பணத்தை மீண்டும் பெற்று கொள்கிறார்கள் திமுக அரசு என பல அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை முன் வைத்தார்கள்.

தமிழக அரசின் இந்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் 2.5 கோடி பெண்களுக்கு தலா 1500 வீதம் கொடுத்து வந்தது ஆளுங்க கட்சி. இந்த திட்டத்திற்கு பெஹன் யோஜனா என பெயர் வைத்து உள்ளது. இதன் எதிரொலியாக நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது மகாயுதி கூட்டணி.

இந்த கூட்டணி கட்சி இந்த தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு  பெஹன் யோஜனா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கியது. அதுதான் அந்த கட்சி வெற்றி பெற காரணம் என சீமான் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இந்த திட்டத்தை கர்நாடக,தெலுங்கானா மாநிலங்கள் செயல்படுத்த உள்ளதாக இருக்கிறது என கூறினார். மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக திமுக அரசு மகளிர் உரிமையை 2000 ரூபாயாக உயர்த்தும் என விமர்சித்து இருக்கிறார் சீமான்.