2026 – சட்டமன்ற தேர்தலுக்கு ரெடியாகும் பாமக…. தனித்துப் போட்டியிட மாஸ்டர் பிளான் போடும் ராமதாஸ்!!

Photo of author

By Madhu

2026 – சட்டமன்ற தேர்தலுக்கு ரெடியாகும் பாமக…. தனித்துப் போட்டியிட மாஸ்டர் பிளான் போடும் ராமதாஸ்!!

Madhu

2026-ramdas-is-making-a-master-plan-to-compete-alone-in-PMK

திண்டிவனம் கே ஆர் எஸ் அம்மா திருமண மண்டபத்தில் பாமக தொழிற்சங்கம் பேரவை சார்பாக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பொதுச்செயலாளர் ராம முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில் ராம முத்துக்குமார் என்னுடன் 45 ஆண்டுகள் பணியாற்றி வருகின்றார். ஆனால் அவரால் சட்டமன்றத்திற்கு தற்போது வரை செல்ல முடியவில்லை. அடுத்த முறையாவது ஜிகே மணி உடன் அவரும் சட்டமன்றத்திற்கு செல்ல நாம் உழைக்க வேண்டும் என்பது அவசியம். 

மாமல்லபுரம் மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில் தனித்துப் போட்டியிட்ட நான்கு இடங்களில் வெற்றி பெற்றவர்கள் நாம் கூட்டணி அமைத்து ஐந்து இடங்களில் தான் ஜெயித்திருக்கிறோம். இது வெட்கமா இல்லையா என பாமக தனித்துப் போட்டியிடுவது குறித்து பேசி இருந்தார். இந்நிலையில் மாமல்லபுரம் மாநாட்டுக்கு பிறகு ராமதாஸ் தொடர்ச்சியாக பாமக மகளிர் அணி, பாமக மாநில நிர்வாகிகள், பாமக இளைஞர் அணி, பாமக மாணவரணி, வன்னியர் சங்கம், பாமகவின் வழக்கறிஞர் அமைப்பான சமூக நீதிப் பேரவை மற்றும் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை, பாமகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனியாக நின்றாலே 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியும். அதற்கான ட்ரிக் என்னிடம் உள்ளது எனவும் தொடர்ந்து பேசி வருவதாக தெரிகின்றது. இதன் தொடர்ச்சியாக திண்டிவனம் பாட்டாளி தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்திப்பேன் அப்போது பேசுகிறேன் என்று மட்டும் சொல்லிச் சென்றார். 

இது குறித்து பாமக வட்டாரங்களில் விசாரிக்கும் பொழுது அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே பிரச்சனை தீர்த்து வைக்க ராமதாஸின் மகள் கவிதா பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். மேலும் வன்னியர் சங்கத்தின் தலைவராக முகுந்த நியமிக்கப்படுவார். பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நீடிப்பார் என்ற முடிவுக்கு இருதரப்பிலிருந்தும் தற்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ராமதாஸ் கவனம் செலுத்தி வருகின்றார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாமகவின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் ராமதாஸ் களமிறங்கும் திட்டம் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டமாம். கடந்த 1987 ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்டு தமிழ்நாட்டையே ஒரு வார காலம் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் 21 உயிர் பலிகளை கொடுத்த போராட்டத்தை விட தீவிரமான ஒரு போராட்டத்தை தற்போது 10.5% இட ஒதுக்கீட்டுக்காக நடத்த வேண்டும் என அவர் உறுதியாக இருக்கின்றார் எனவும் பாமக வட்டாரத்தில் கூறப்படுகின்றது. 

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு போராட்டத்தை எப்படி நடத்துவது, சிறைக்கு சென்றால் ஜாமீனில் வெளியே கொண்டு வர வேண்டும், வேறு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றார். 

மேலும் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் இலக்காக ராமதாஸ் கொண்டுள்ளார். தன்னுடைய அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்குமே பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காது என கணித்து கூறி இருக்கின்றார். 

அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணி என்பதை விரும்புகின்றார். எம்பி பதவி காலம் முடிவடையும் நிலையில் அதிமுக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என கூறப்படுகின்றது. அதிமுக தரப்பிலிருந்து இரண்டு எம் பி சீட்டுகளை ஜிகே வாசனுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் கொடுக்கப்பட்ட நிலையில் இருவருமே மக்களவைத் தேர்தலின் பொழுது எதிராக மாறியுள்ளனர் அதனால் இந்த முறை வாய்ப்பில்லை என்று கூறியதாக கூறப்படுகின்றது. அதனால் இந்த முறை அன்புமணி ராமதாஸுக்கு எம் பி சி டே கிடைக்க வாய்ப்பில்லை.