விவசாயிகளின் வங்கி கணக்கை தேடி வரும் பணம்; வெளியான முக்கிய அறிவிப்பு!

0
16

மத்திய அரசு மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியோஜனா திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் நேரடி பலன் பரிமாற்றங்கள் மூலம் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வரும். இந்த திட்டத்தின் மூலம் 2000 ரூபாய் 19 தவணையாக வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இருபதாவது தவணைத் தொகை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் மிகவும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் இந்த திட்டத்தின் இருபதாவது தவணை தொகையாக சுமார் 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் இருபதாவது தவணை எப்போது டெபாசிட் செய்யப்படும் என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. ஜூன் 20ஆம் தேதி அன்று விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இந்த பணம் வரவு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் நிதி உதவி பெறுவதற்கு விவசாயிகளின் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம். ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு நிலையை சரிபார்க்க வேண்டும். ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கில் உள்ள நேரடி பரிமாற்ற விருப்பத்தை செயலில் வைத்திருக்க வேண்டும்.

கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டியது அவசியம். மேலும் பிஎம் கிசான் வெப்சைட்டில் உள்ள know you are status வசதியின் கீழ் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு நிலையை சரி பார்த்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை https://pmkisan.gov.in/ என்ற வெப்சைட்டில் சென்று பார்த்துக் கொள்ளலாம். தங்களுடைய முழு விவரங்களையும் நிரப்ப வேண்டும்.

அதில் மாநிலம், மாவட்டம், வட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு ஷோ பட்டனை கிளிக் செய்தால் தங்களுடைய விவரங்கள் காண்பிக்கப்படும். மேலும் கேஒய்சி சரி பார்ப்பை சரியாக முடித்த பயனாளிகளுக்கு மட்டுமே பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் பணம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இருக்க வேண்டியது அவசியம்.

Previous articleஉயிரிழந்த நபருக்கு பதவியா; அதிமுக தலமையால் நிர்வாகிகள் அதிருப்தி!
Next articleமுருக பக்தர்கள் மாநாட்டில் இடம்பெறும் ஆறுபடை வீடுகள்; உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு!