பிரதான் மந்திரி கிசான் திட்டம்; விவசாயிகளின் வங்கி கணக்கில் இருபதாவது தவணை வரப்போகுது!

0
35

பிரதான்  மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.. விவசாயிகள் இதன் மூலமாக தங்களது விவசாயத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று 19வது தவணை வந்து சேர்ந்த நிலையில் இருபதாவது தவணை எப்போது, வரும் என விவசாயிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் அரசு இணையதளத்தில் இருபதாவது தவணை குறித்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.19 வது  பற்றிய தகவல் உள்ள நிலையில் பழைய முறையை பார்த்தால் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு தவணை வந்து சேரும்.

இந்த முறையும் அப்படி வந்து சேரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கேஒய்சி முடிக்கவும், இல்லையெனில் ஒரு ரூபாய் கூட கிடைக்காது என தகவல்கள் வெளியாகி வருகின்றது. விவசாயிகள்  நில சரிபார்ப்பை செய்யவும், நில ஆவணங்களை சரியாக பதிவேற்றப்பட்டது என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்திருப்பது அவசியம். அரசு வழங்கும் பணத்தை பெற இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விசாயிகள் கேஒய்சி செய்யவில்லை என்றால் உங்களுக்கு வழங்கப்படும் பணம் நிறுத்தப்படும் எனவும், நில ஆவணங்கள் முழுமையடை வில்லை என்றாலும் பணம் கிடைக்காது.

வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றாலும் பணம் செலுத்துவது நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.. முதலில் pmkisan.gov.in என்ற தளத்திற்கு சென்று பயனாளி நிலைய அல்லது பயனாளி பட்டியல் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் தங்களுடைய மாநிலம், மாவட்டம் ,வட்டாரம், கிராமம், பற்றிய தகவல்களை நிரப்ப வேண்டும்.

அதன் பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உங்களுடைய பெயரை பார்க்க வேண்டும். அதில் பெயர் இல்லை என்றால் உடனே சிஎஸ்சி மையம் அல்லது வேளாண்மை துறை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Previous articleரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா; கல்யாண தேதி எப்போ!
Next articleவாக்காளர் அடையாள அட்டையில் இந்த அப்டேட்டை பண்ணீட்டிங்களா; தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!