மகளிர் உரிமை தொகையில் இனி இவர்களும் சேரலாம்; அரசு வெளியிட்ட அறிவிப்பு!

0
63

திமுக தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் தகுதி வாய்ந்த ஒரு சில பெண்களுக்கு இந்த பணம் கிடைக்கவில்லை என கோரிக்கை வைத்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் மீண்டும் இதற்கு முகாம் நடத்தப்படும் அந்த முகாமில் விண்ணப்பிக்கும் பெண்களை இந்த திட்டத்தில் புதிய பயனாளிகளாக சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் வீட்டில் குடும்ப தலைவி இல்லாத பட்சத்தில் 21 வயதை தாண்டிய திருமணம் ஆகாத மகள்களும் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் குடும்பத்தலைவி இயற்கையை எய்திவிட்டாலும் அந்த வீட்டில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண் இருந்தால் அவர் உரிமை பெற்றவர் என தெரிவித்துள்ளனர்

ரேஷன் கார்டில் குடும்பத்தலைவி பெயர் இல்லாவிட்டாலும் பிற தகுதிகள் இருந்தால் அந்த பெண் விண்ணப்பிக்கலாம். இந்த முறை தன்னார்வலர்கள் நேரில் சென்று தேவையான ஆவணங்களை சரிபார்த்து உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தை நிரப்ப வழி காட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது பணம் பெற்று வரும் மகளிர்களுக்கு அரசு வேலை கிடைத்திருந்தால் அவர்களுக்கு இனி பணம் கிடைக்காது என அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇனி தமிழ்நாடு முழுக்க ஆட்டு இறைச்சி ஒரே விலை தான்!! தமிழக அரசு திடீர் அறிவிப்பு!!
Next articleடம்மியாகிப் போன வானதீ மற்றும் தமிழிசை.. குஷ்பு மீனாவுக்கு போகும் அமைச்சர் சேர்!! ரெடியான லிஸ்ட்!!