26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்!

Photo of author

By Hasini

26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்!

Hasini

22-year-old junior sexually harasses 26-year-old nursing student 100 page threatening love letter!

26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்!

இங்கிலாந்தின் ஹெட்டிங்டனில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு புரூக்ஸ்  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 22 வயது ஆன இந்திய மாணவன் ஒருவன் பயின்று வருகிறான். அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் இருபத்தி ஆறு வயதான நர்சிங் மாணவி ஒருவரை பின் தொடர்ந்து ஒரு வருடமாக காதல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த மாணவியை கடத்தி கொண்டு போய் விடுவதாகவும் கூறி, அந்த பெண்ணுக்கு பய உணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

அவர் அந்த பெண் பயப்படும் படி நூறு பக்க கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளார். மேலும் அந்த மாணவியை அச்சுறுத்தும் வகையில் 100 பக்க கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளார். மேலும் அதில் ஆன்லைனில் இருந்து தேடி எடுக்கப்பட்ட பயமுறுத்தும் பலதரப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். மேலும் அவர் அனுப்பிய வாய்ஸ் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். உன்னை என் மனைவி ஆக்குவேன். உன் மூலமாக என் குழந்தைகளை பிறக்க வைப்பேன். உன்னை என்னுடன் வாழ வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இதனால் மிகவும் பயந்து போன அந்த மாணவி வீட்டிலிருந்து வெளியே கூட செல்லாமல் இருந்தார். அந்த மாணவன் அளித்த கடுமையான வற்புறுத்தலுக்கு மறுப்பு தெரிவித்து கொண்டிருந்த  மாணவி மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்தால், போலீசில் புகார் அளிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதையெல்லாம் தற்போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள அந்த மாணவி  பாவ்நானி, தனக்கு அந்த மாணவன் சில நேரங்களில் பாலியல் ரீதியான தொல்லை கொடுப்பான் என்றும் நீதிமன்றத்தில் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முடிவில் இந்த வழக்கு அந்த மாணவன் மீது புகார் கொடுத்து அதற்கான வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. வழக்கினை விசாரித்த ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்ற நீதிபதி நைகல் டேலி, அந்த மாணவனுக்கு நான்கு மாத சிறை தண்டனையும், இரண்டு வருடங்கள் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்தும் தண்டனை வழங்கி உள்ளார். மேலும் அந்த மாணவன் பாதிக்கப்பட்ட மாணவியை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள கூடாது என்று ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்து, இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதற்கு முன் அந்த மாணவனை தனது ஜாமீனை மீறியதற்காக ஒரு மாதம் சிறை காவலில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நீதிபதி பாலியல் சார்ந்த புகார்களில் பல்கலைக்கழக கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டில் இருந்து இந்த தொல்லைகளை அந்த மாணவி அனுபவித்ததோடு,   இப்போதாவது அந்த விஷயத்திற்கு முடிவு எடுத்து முற்றுப்புள்ளி வைத்து உள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார் என்றும் தெரிவித்தார்.