பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததன் காரணமாக 23 பேர் பரிதாப பலி!

பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததன் காரணமாக 23 பேர் பரிதாப பலி!

கென்யா நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை அதிக அளவில் பொழிந்து வருகிறது. அதன் காரணமாக ஆறுகளில் எல்லாம் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு தலைநகர் நைரோபியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக தேவாலயத்தின் பாடகர் ஒருவர், அவர் குழுவினருடன்  ஒரு பேருந்தின் மூலம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு கிடுய் கவுண்டியில் உள்ள என்சியூ என்ற ஆற்றின் பாலத்தின் மீது வேகமாக  ஓடிய வெள்ளை நீரை பேருந்து கடந்து செல்ல முயற்சித்தது. அப்போது அந்த பேருந்து எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மிகுந்த மரண ஓலம் எழுப்பினர்.

அதன் பின்னர் இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மீட்பு பணிகளிலும் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர் என்று முதல்கட்ட விசாரணையின் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. அவர்களில் நான்கு பேர் குழந்தைகள், மேலும் 12 பேர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேருந்து ஓட்டுநருக்கு அந்த சாலை பழக்கம் இல்லாததால் தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஒரு ஒரு சிலர் கூறுகின்றனர். இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அந்த மாகாண கவர்னர் நகிலு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். பலியான 23 பேரின் உடல்களும் தற்போது மீட்கப்பட்டுள்ளன. திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது விபத்து ஏற்பட்டு அதன் மூலம் இருபத்தி மூன்று பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment