கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 24 பேர் பலி! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!

0
162
24 killed in last two days alone! The police were shocked to hear the reason!
24 killed in last two days alone! The police were shocked to hear the reason!

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 24 பேர் பலி! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!

பீகாரில் தற்போது பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது. அங்கு மதுவிலக்கு அமலில் உள்ளதன் காரணமாக சட்டவிரோதமாக பலர் கள்ள சாராயம் காய்ச்சி குடிக்கும் செயலும் செய்து  வருகின்றனர். இதில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதும் வழக்கமான ஒன்று தான்.

அரசு என்னதான் மதுப்பழக்கம் உடலுக்கும், நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று விளம்பரப்படுத்தினாலும், அதை தயாரிப்பவர்களையோ, இல்லை விற்பனை செய்பவர்களையோ எதுவும் செய்வதில்லை. சொல்வதில்.  குடிப்பவர்களை மட்டுமே குறை கூறுகிறது. அதிலும் அரசு விற்பனை செய்தால் தவறில்லை என்பது போல் தான் செயல்படுகிறது.

இந்நிலையில் அம்மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தியதாக கூறப்படும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் நவல் கிஷோர் சௌத்ரி தெரிவித்துள்ளார். கோபால்கஞ்ச் மாநிலத்தில்  கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது வரை 16 ஆக உயர்ந்துள்ளது.

அந்த மாநிலத்தில் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சம்பரான் மாவட்டங்களில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இதன் காரணமாக இருபத்தி நான்கு பேர் வரை இறந்துள்ளனர் என்பதும், பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பரான் மாவட்டத்தில் பெட்டியாவில் உள்ள தெலுவா கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் நேற்று மட்டும் இறந்துள்ளனர்.

உயிரிழப்புகான காரணத்தை இரண்டு மாவட்ட நிர்வாகங்களும் இதுவரை உறுதியாக சொல்லவில்லை. கடந்த 10 நாட்களில் மற்றும் வடக்கு பீகாரில் நடந்த மூன்றாவது சம்பவம் இது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்

Previous articleமாநகராட்சியானது தாம்பரம்! நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம்!
Next articleகவர் வேண்டும் என்றால் இதையும் சேர்த்து அனுப்புவோம்! அந்த நிறுவனத்தால் அதிர்ந்து போன வாடிக்கையாளர்!