உலக அளவில் 25.69 கோடியாக உயர்ந்த நோய் தொற்று பாதிப்பு!

0
133

சீன நாட்டின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் வருடம் நோய் பரவல் கண்டறியப்பட்டது தற்சமயம் நோய்த்தொற்றுகள் சுமார் 221 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகின்றது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது இந்த நிலையிலும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

ஆகவே உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் காரணமாக பாதிப்படைந்த வர்களின் எண்ணிக்கை 25 கோடியே 69 லட்சத்து 13 ஆயிரத்து 574 அதிகரித்து இருக்கிறது நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு கோடியே 98 லட்சத்து 33 ஆயிரத்து 38 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து இதுவரையில், இருபத்தி மூன்று கோடியே 19 லட்சத்து 25 ஆயிரத்து 936 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள் இருந்தாலும் நோய்த்தொற்று காரணமாக, உலகம் முழுவதும் இதுவரையில் 51 லட்சத்து 54 ஆயிரத்து 595 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

Previous articleமழை வெள்ள பாதிப்பு! நாளை சென்னை வருகிறது மத்தியகுழு!
Next article20-11-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்