நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு 25 இலட்சம் உறுதி! – அகிலேஷ் யாதவ்!!

Photo of author

By Hasini

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு 25 இலட்சம் உறுதி! – அகிலேஷ் யாதவ்!!

உத்திரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதில் தங்களது ஆட்சியை தக்கவைக்க பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து வருகின்றனர். பல்வேறு நலத்திட்டங்களையும் மக்களுக்காக செய்வதாக மக்களுக்கு முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். 2022 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் நாங்கள் எங்களது கட்சி ஆட்சிக்கு வரும்போது, வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடிய போராட்டத்தில், உயிர் நீத்த அனைத்து விவசாயிகளுக்கும், தலா 25 லட்சம் வழங்குவோம் என்று உறுதி கூறியுள்ளார்.

ஒரு விவசாயியின் வாழ்க்கை மிகவும் விலை மதிப்பில்லாதது. ஏனெனில் அவர் மற்றவர்களுக்கு ஆகவே உணவு தானியங்களை பயிர் செய்கிறார். மற்றவர்களுக்காகவே வாழ்ந்து வருகின்றனர் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் சங்கத்தினருக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது விவசாயிகள் உட்பட அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.