வயதானவரை கைப்பிடித்து திருமணம் செய்த 25 வயது பெண்! பலரது சாபங்களை பெற்ற வைரல் திருமணம்!

Photo of author

By Hasini

வயதானவரை கைப்பிடித்து திருமணம் செய்த 25 வயது பெண்! பலரது சாபங்களை பெற்ற வைரல் திருமணம்!

Hasini

Updated on:

25 women married to an old man holding hands! Viral marriage that has received the curses of many!

வயதானவரை கைப்பிடித்து திருமணம் செய்த 25 வயது பெண்! பலரது சாபங்களை பெற்ற வைரல் திருமணம்!

தற்போதுள்ள பெண்கள் நன்கு படித்து யாரையும் எதிர்பார்க்காமல், அவர்களே கை நிறைய சம்பாதித்துக் கொள்கின்றனர். அதன் காரணமாக மணமகன் வீட்டிற்கு பல கட்டளைகளை பிறப்பித்து வருகின்றனர். அதன் காரணமாகவே பலருக்கு திருமணம் எட்டாக் கனியாக உள்ளது. அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ் தான் இதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.

தும்கூரில் 65 வயதான வரை 25 வயது இளம் பெண் திருமணம் செய்த புகைப்படம் வெளிவந்து பல்வேறு தரப்பினருக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளன. இத்தகைய நிலையில் இவ்வளவு வயதான ஒருவரை எப்படி துணிந்து 25 வயது பெண் திருமணம் செய்தார். அவர் யார் என்ற விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தும்கூர் மாவட்டம் குனிகல் கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயதான மேகனா. இவருக்கும் வேறு ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த  1 வருடத்திற்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்ற மேகனாவின் கணவர் மாயமாகிவிட்டார். அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் காரணமாக அந்த பெண் தனியாகத்தான் வாழ்ந்து வந்தார்.

மேலும் தான் தனியாக இருப்பதை உணர்ந்த மேகனா, இரண்டாவது திருமணம் செய்யவும் முடிவு செய்தார். இந்நிலையில் அதே பகுதியில் சிக்கதனேகுப்பே கிராமத்தில் வசிக்கும் சங்கரண்ணா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை திருமணம் செய்ய விரும்பினார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று அதே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது. இதில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிலையில் அவர்களது திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவர்களது வயிற்றெரிச்சலை கொட்டி வருகின்றனர். இருந்தாலும் மேகனாவிற்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை பதிவு செய்தாலும்,அவருக்கு  எதிராகவும் பல கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.