25 வயது பெண் பயங்கரவாதியாக மாறிய விபரீதம்:? தாயார் செய்த செயல்?

Photo of author

By Pavithra

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான கல்லூரி மாணவி பிரக்யா பெற்றோருடன் வசித்து வந்தார்.கடந்த 2016ஆம் ஆண்டு துர்கா பூஜைக்கு முந்தைய நாள் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.ரொம்ப நேரமாகியும் பிரக்யா வீட்டிற்கு வராததால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள் தனது மகளை, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடிப் பார்த்தனர் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவலர்களும் அவரைத் தேடினர் மேலும் செல்போன் லாகேஷன் வைத்து கண்டு பிடிக்க முயன்றனர்.இருந்தபோதும் எந்த பயனும் கிடைக்கவில்லை.

நான்கு ஆண்டுகள் கழித்து 2 நாட்களுக்கு பிறகு பிரக்யா தனது அம்மா கீதாவிற்கு போன் செய்துள்ளார்.தான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாகவும்,வங்கதேசத்தில் தங்கியிருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.மேலும் அந்த பெண் 4 ஆண்டுகளில் எப்படியோ அந்த பெண்ணின் மனநிலை மாற்றப்பட்டு ஜமாத்-உல்-முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளார்.மேலும் பிரக்யா என்ற பெயரை
ஆயிஷா ஜன்னத் மோஹோனா என்று மாற்றம் செய்துள்ளார்.பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் அதற்காக நிதி திரட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டு
இதன் காரணமாக டாக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவரது தாய் கீதா கூறுகையில், அவள் மிகவும் கூச்ச சுவாபம் உடையவள்,அவளுக்கு நிறைய நண்பர்கள் கிடையாது வீட்டிலையே அமைதியாக இருக்கக்கூடியவள்.
தொடக்கத்தில் அவரது நடவடிக்கைகளில் எந்த சந்தேகமும் எங்களுக்கு ஏற்படவில்லை. ஊடகங்களில் வெளியான செய்தி மூலம்தான் இந்த உண்மை எங்களுக்கு தெரியவந்தது.
அவள் ஒரு பயங்கரவாதியாக மாறுவாள் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.
எனது மகளுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.