இன்றைய வானிலை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

0
200

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை நீலகிரி தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. ஓரிரு பகுதிகளில் அதிக மழை மற்றும் சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர். காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் கோவை உதகை தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஓரிரு பகுதிகளில் அதிக கனமழை மற்றும் திண்டுக்கல், மதுரை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

வரும் 30 ஆம் தேதி உதகை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து அதற்கான வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது

Previous articleஆப்கானிஸ்தான் அமெரிக்கர்கள் மீட்பு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!
Next articleகாபூலில் இருந்து ஒரே நாளில் இத்தனை பேர் வெளியேற்றமா? வெள்ளை மாளிகை சொன்ன செய்தி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here