2 ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்! விறுவிறுவென்று துவங்கிய ஓட்டுபதிவு!

Photo of author

By Hasini

2 ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்! விறுவிறுவென்று துவங்கிய ஓட்டுபதிவு!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்கட்ட தேர்தல் 6ம் தேதியும் இரண்டாம் கட்டமாக தேர்தல் இன்று 9-ஆம் திதியான இன்றும் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி அக்டோபர் 6ஆம் தேதி முதல் கட்ட தேர்தலில் வாக்குபதிவு நடைபெற்று முடிந்தது. 14662 பணியிடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. வாக்கு பேட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் எழுபத்தி நான்கு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த ஒன்பது மாவட்டங்களிலும் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கி விட்டது.

9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கும், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கும், 1324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 10329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 341 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுவதாக சொல்லப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதன் காரணமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்கவுள்ளனர். ஒவ்வொரு வாக்காளரும் கிராம ஊராட்சி உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஆகிய நான்கு பதவிகளுக்கான 4 ஓட்டுகளை போட வேண்டும் என்றும் சொல்லியுள்ளனர்.

இந்த ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அதன்படி இந்த மாவட்டங்களில் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 40 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 106 கிராம ஊராட்சி தலைவர்கள், 630 கிராம ஊராட்சி உறுப்பினர் என மொத்தம் 789 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதற்கான வாக்குப்பதிவுகள் தொடங்கி உள்ளது. மேலும் இந்த தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வாக்குச்சாவடிகளில் எல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.