இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி! வெற்றி பெறும் முனைப்பில் அணியின் வீரர்கள்!

Photo of author

By Sakthi

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய அணி விராட் கோலி தலைமையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.இலங்கைக்கு சென்ற இன்னொரு இந்திய அணிக்கு ஷிகர் தவான் தலைமை தாங்கியிருந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த பின்னர் இங்கிலாந்திலேயே தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வந்தது கோலி தலைமையிலான இந்திய அணி.

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அங்கேயே தங்கியிருந்து பயிற்சி பெற்று வந்த இந்திய அணி தற்சமயம் சென்ற 4ஆம் தேதி இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடியது.இந்த போட்டி டிராவில் முடிந்தது. ஆனால் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான சாதகமான சூழ்நிலை இருந்த சூழ்நிலையில் மாலைக்கட்டு ஆட்டம் டிரா ஆனது.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளையதினம் ஆரம்பிக்க இருக்கிறது இந்த போட்டிக்கான 18 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது அதில் ஆல்ரவுண்டர் மொயின் அலி சேர்க்கப்பட்டிருக்கிறார் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது மற்ற எந்த அணிகளையும் விட இந்தியாவிற்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் அவர் 673 மற்றும் 49 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்.