பீகாரில் பிடிபட்ட 3 கோடி மதிப்பிலான பொருள்! இதுவரை 3 பேர் கைது!

Photo of author

By Hasini

பீகாரில் பிடிபட்ட 3 கோடி மதிப்பிலான பொருள்! இதுவரை 3 பேர் கைது!

தற்போது அனைத்து மாநிலங்களிலும் போதைப்பொருட்களின் பழக்கம் அதிக அளவில் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தாலும், மாணவர்களிடையே இந்த பழக்கம் வேரூன்றி சென்றுள்ளது. மேலும்  மாத்திரைகளாகவும், ஊசிகள் ஆகவும் எப்படியோ ஒரு விதத்தில் அதை பயன்படுத்தி வருகின்றனர்.

அதை விற்க ஆங்காங்கே தனி தனியாக கூட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. அதிலும் கோவை, திருச்சி, சென்னை போன்ற பல மாநிலங்களில் கல்லூரி மாணவர்களிடம் அதிகளவில் போதை பொருள் பழக்கம் இருப்பதாகவும் சொல்கின்றனர். அதே போல்  தற்போது பீகாரில் கயா நகரில் முபாசில் பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவது என போலீசாருக்கு ரகசிய தகவலை வழங்கினர். இதை அடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் போலீசாரின் தீவிர சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையிலான 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் போதைப்பொருள் இருந்தது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் 2.2 கிலோ எடை கொண்ட பிரவுன் சுகர் எனப்படும் போதைப் பொருள் கண்டெடுக்கப் பட்டதாகவும் அதன் மதிப்பு மட்டும் சுமார் 3 கோடி வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே அந்த 3 பேரையும் கைது செய்து, மேலும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.