தமிழக அரசு தரும் ரூ 3 லட்சம்.. இவர்களெல்லாம் கட்டாயம் விண்ணபிக்கலாம்!!

Photo of author

By Janani

தமிழக அரசு தரும் ரூ 3 லட்சம்.. இவர்களெல்லாம் கட்டாயம் விண்ணபிக்கலாம்!!

Janani

3 lakhs given by the Tamil Nadu government.. All these people must apply!!

கலைஞர் கைவினை திட்டம்: பயனடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு;
கலைஞர் கைவினை திட்டமானது கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டமானது பல்வேறு தொழில் திறன்களை நன்கு அறிந்தும் தொழிலை தொடங்குவதற்கான முதலீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒருவர் தனக்கான சொந்த தொழிலை அமைத்துக் கொள்ள உதவும் வகையில் இத்திட்டமானது ரூபாய் 3 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது அவற்றுள் 25% மானியமான ரூ 50, 000 மும், 5% வரை வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது.
இத்திட்டமானது தொடங்கி 45 நாட்கள் கடந்த நிலையில் தற்போது 20,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்திட்டத்திற்கு என தமிழ்நாடு அரசு ரூ. 75 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. மக்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

மேலும் எந்த வகுப்பினரை சேர்ந்தவராகவும் இருக்கலாம். தமிழ்நாடு அரசு கைவினை தொழில்களான ஒரு 25 வகையான தொழில்களை குறிப்பிட்டு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது அவையாவன 1. கட்டட வேலைகள் 2. மரவேலை பாடுகள் 3. பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல் 4. தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல் 5. மீன் வலை தயாரித்தல் 6. மலர் வேலைப்பாடுகள் 7. மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள் 8. நகை செய்தல் 9. சிகை அலங்காரம், அழகு கலை.

10. துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள் 11. கதை வேலைப்பாடுகள் 12. பூட்டு தயாரித்தல் 13. உலோக வேலைப்பாடுகள் 14. பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருட்கள் 15. தையல் வேலை 16. கூடை செய்தல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல் 17. மண்பாண்டங்கள் செய்தல் 18. பொம்மைகள் தயாரித்தல் 19. படகு கட்டுமானம் 20. பாசிமணி வேலைப்பாடுகள்

21. துணிவெழுத்தல் மற்றும் தேய்த்தல் 22. சிற்ப வேலைபாடுகள் கற்சிலை வடித்தல் 23. ஓவியம் வரைதல் வண்ணம் பூசுதல் 24. கண்ணாடி வேலைப்பாடுகள் 25. பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல் போன்ற 25 வகையான தொழில்கள் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கு மக்கள் விண்ணப்பிக்க வேண்டுமானால் அருகில் உள்ள இ சேவை மையங்களுக்குச் சென்று www.msmeonline .in.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுள் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கான உதவி தொகையை வழங்கும்.