பிரதமரை நோக்கிய பாய்ந்த 3 முக்கிய கேள்கவிகள்… காங்கிரஸ் எம்.பி மக்களவையில் அதிரடி!!

0
111

 

பிரதமரை நோக்கிய பாய்ந்த 3 முக்கிய கேள்கவிகள்… காங்கிரஸ் எம்.பி மக்களவையில் அதிரடி…

 

இன்று தொடங்கிய மக்களவையில் காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் அவர்கள் பிரதமர் மோடி அவர்களை நோக்கி மூன்று முக்கிய கேள்விகளை முன் வைத்துள்ளார்.

 

மணிப்பூர் மாநில பிரச்சனை காரணமாக எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து ஆளும் மத்திய அரசான பிரதமர் மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான நோட்டிஸ் அளித்துள்ளது. இது தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக பாஜக அரசின் மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடியது.

 

மக்களவையில் மீண்டும் மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் தொடங்கியது. மீண்டும் தொடங்கிய விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கவுரவ் கோகாய் அவர்கள் தொடங்கி வைத்தார். அப்பொழுது அவர் பிரதமர் மோடி அவர்களை நோக்கி மூன்று கேள்விகளை முன் வைத்தார்.

 

கேள்வி 1:

 

மணிப்பூர் பிரச்சனை பற்றி எரிந்து கொண்டிருக்கும் பொழுது பிரதமர் மோடி அவர்கள் இதுவரை அமைதியாக இருப்பது ஏன்?

 

கேள்வி 2:

 

மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக 80 நாட்களுக்கு பிறகு பிரதமர் மோடி அவர்கள் பதில் அளித்தது ஏன்? அவர் அளித்த அந்த பதிலும் வெறுமனே 30 விநாடிகள் மட்டுமே இருந்தது.

 

கேள்வி 3:

 

மணிப்பூர் பிரச்சனை காரணமாக மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் அவர்களை பதிவியில் இருந்து நீக்காதது ஏன்? என்று அதிரடியாக மூன்று கேள்விகளை முன்வைத்தார்.

 

Previous articleஇரவில் திருடச் சென்ற இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்… மறுநாள் காலையில் பார்த்த வீட்டு உரிமையாளர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Next articleமித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!!