கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்கள்..!!

Photo of author

By Janani

கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்கள்..!!

Janani

1.பெரும்பாலான மக்கள் கோவிலில் தான் ஊர் கதை மற்றும் உலக கதைகளை பேசுகின்றனர். ஆனால் கோவிலில் இது மாதிரியான விஷயங்களை பேசக்கூடாது. அதாவது மற்றவர்களை குறை கூறி பேசுவது கூடாது. கோவிலுக்கு சென்றால் எப்பொழுதும் கடவுளைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கடவுளின் எண்ணங்கள் மட்டுமே நமது மனதில் இருக்க வேண்டும்.

மன அமைதி வேண்டும் என்பதற்காகத்தான் நாம் கோவிலுக்கு செல்கிறோம். அங்கு சென்றும் மற்றவர்களைப் பற்றி குறைவாக பேசுவது, இழிவாக பேசுவது இது போன்றவைகள் கூடாது. பொதுவாக கோவிலுக்கு சென்றால் அதிகம் பேசக்கூடாது. மன அமைதிக்காக கோவிலுக்கு செல்லக்கூடிய நாம், அமைதியாக தான் கடவுளை வழிபட்டு வீட்டிற்கு வர வேண்டும்.

கோவிலுக்கு சென்று இதுபோன்ற விஷயங்களை பேசுவதை நாம் தவிர்த்துக் கொள்வதுடன் மற்றவர்கள் பேசுவதையும் நாம் தவிர்த்து விட வேண்டும். கோவிலில் இந்த விஷயத்தை நாம் பேச வேண்டாம் வீட்டிற்கு சென்று பேசிக் கொள்ளலாம் என்று நாம் எடுத்துரைக்க வேண்டும்.

2. கோவிலுக்கு சென்றால் நிதானம் என்பது கண்டிப்பாக நமக்கு வேண்டும். மருத்துவமனை, துணிக் கடைகள் அல்லது மற்ற வேறு ஏதேனும் ஒரு இடங்களுக்குச் செல்லும் பொழுது நிதானமாக, பொறுமையாக காத்திருந்து எவ்வாறு ஒரு செயலை செய்கிறோமோ, அதனை போன்று தான் கோவிலிலும் நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும்.

கோவிலில் அதிக கூட்டம் இருந்தால் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் நின்று கடவுளை வணங்க வேண்டுமா என்று கோபம் கொள்ளக் கூடாது. கடவுளை காண கோவிலுக்கு சென்ற நாம் பொறுமையாகவும், நிதானமாகவும் காத்திருந்து தான் கடவுளை வணங்கி வர வேண்டும்.

மற்ற வேலைகளை செய்ய செல்ல வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக கடவுளை வணங்கி விட்டு, சிறிது நேரம் கூட கோவிலில் அமராமல் செல்லக் கூடாது. கோவிலில் இருக்கும் கூட்ட நெரிசலின் காரணமாக மற்றவர்களிடம் கோபம் கொண்டு பேச கூடாது. அதாவது நாம் பேசும் வார்த்தைகளிலும் நிதானம் தேவை.

கோவிலில் நாம் நடக்கக்கூடிய நடை, பேசுகின்ற வார்த்தை மற்றும் நமது எண்ணங்கள் ஆகிய அனைத்திலும் நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும்.

3. கோவிலில் தரக்கூடிய அருட் பிரசாதங்களை எக்காரணம் கொண்டும் விரயம் ஆக்க கூடாது. கோவிலில் கொடுக்கக்கூடிய அருட் பிரசாதம் உணவு என்பது மட்டுமல்லாமல் கோவிலில் கொடுக்கக்கூடிய விபூதி மற்றும் பூக்களையும் வீணாக்க கூடாது.

கோவிலில் தரக்கூடிய விபூதியை நமது நெற்றியில் வைத்துக் கொண்டு மீதி இருக்கக்கூடிய விபூதியை, கோவிலில் ஏதேனும் ஒரு தூண்களில் கொட்டி விடுவோம் அவ்வாறு செய்யக்கூடாது. அதேபோன்று கோவிலில் கொடுக்கக்கூடிய பூக்களையும் வாங்கி, நமது வீட்டில் ஒரு ஓரத்தில் வைத்து விடுவோம் அவ்வாறு செய்யக்கூடாது.

உணவாக இருந்தாலும் அது நமக்கு வேண்டிய அளவிற்கு மட்டும் வாங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு கோவிலில் கொடுக்கக்கூடிய பிரசாதம் எதுவாக இருந்தாலும், அதனை விரயம் ஆக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோவிலில் கொடுக்கக்கூடிய மஞ்சள், குங்குமம், சந்தனம், தீர்த்தம் இது போன்ற மங்களப் பொருட்கள் எதையும் வீணாக்க கூடாது. மற்றவர்களுக்கும் வாங்கிக் கொண்டு செல்வோம் என்று, அதிகமாக வாங்கி வீணாக்குவது என்பது கூடாது. எதுவாக இருந்தாலும் அதனை அளவாக வாங்கிக் கொள்வது தான் நல்லது.