பத்து சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

Photo of author

By Sakthi

பத்து சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மத்திய அரசு தற்பொழுது ஒரு நபர். பத்துக்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வைத்திருந்தால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நான்கு தொலை தொடர்பு நிறுவனங்கள் இருக்கின்றது. இருப்பினும் அதில் பிரபலமாக ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் இருக்கின்றது. இந்த மூன்று தொலை தொடர்பு நிறுவனங்களும் வியாபாரத்தை பெருக்குவதற்கும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் பலவிதமான சேவைகளையும் ஆஃபர்களையும் அறிவித்து வருகின்றன.
மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே சிம்கார்டுகளை இலவசமாக வழங்கி அதற்கு டேட்டா, கால்ஸ், எஸ்.எம்.எஸ் ஆகிய சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக தருகின்றது. இதனால் மக்களும் இலவசமாகத் தானே கிடைக்கின்றது என்று பல சிம்கார்டுகளை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
இவ்வாறு சிம் கார்டுகள் இலவசமாக வழங்கப்படும் பொழுது குற்றவாளிகள் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும் இலவசமாக சிம் கார்டுகளை வாங்கி குற்றச் செயல்களை செய்து விட்டு அந்த சிம் கார்டுகளை வீசி விடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் மத்திய அரசு தற்பொழுது புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
இதையடுத்த மத்திய அரசு அமல்படுத்தியுள்ள இந்த சட்டம் என்ன சொல்கின்றது என்றால் ஒருவர் 9 சிம் கார்டுகள் வைத்திருக்கலாம். அதுவே 10 சிம் கார்டுகள் அல்லது பத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்திருந்தால் அவர்களுக்கு 50000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதே போல பதற்றம் நிறைந்த ஜம்மு, காஷ்மீர் போன்ற பகுதிகளில் இருக்கும் நபர்கள் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகின்றது.
ஒரு நபர் மேற்கூறியவாறு அதிக சிம் கார்டுகள் வைத்து முதல் முறை மாட்டினால் அவர்களுக்கு 50000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் மேலும் இந்த குற்றத்தை அந்த நபர்கள் செய்தால் 200000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.
அதே போல ஒருவருக்கு தெரியாமல் அவர்களுடைய ஆவணங்களை வைத்து சிம் கார்டுகள் வாங்கியது தெரிய வந்தாலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாக வயர்லெஸ் கருவி வைத்திருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ, தொலை தொடர்பு சேவைகளை துண்டிக்கும் கருவிகளை வைத்திருந்தாலோ அந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் என்றும் அல்லது 50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சட்டம் மூலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு மட்டுமில்லாமல் தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் ஒரு சிலவற்றை இந்த சட்டம் கூறுகின்றது. அது என்னவென்றால் வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் வணிக ரீதியான செய்திகளை அனுப்பினால் தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமில்லாமல் தொடர்ந்து சேவைகளை வழங்க தடையும் விதிக்கப்படும் என்றும் இந்த சட்டம் கூறுகின்றது.