ராகு கேது பெயர்ச்சியினால் பணவரவு யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்..!!

Photo of author

By Janani

ராகு கேது பெயர்ச்சியினால் பணவரவு யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்..!!

Janani

ராகு கேது பெயர்ச்சி ஆனது கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி சனிக்கிழமை நடந்துள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியினால் அவர்களது கல்லா கட்டி, பணத்தை மூட்டையாக கட்டப் போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் என்பதை குறித்து தான் இந்த பதிவில் காணப் போகிறோம். அதேபோன்று இந்த ராகு கேது பெயர்ச்சியினால் எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் காண்போம்.

18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறக்கூடியவர் ராகு பகவான். இந்த ராகு பகவான் கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 26 ஆம் தேதி மாலை 4:20 மணிக்கு மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து உள்ளார். இந்த ராகு பெயர்ச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. ராகுகான பரிகார ஸ்தலமாக விளங்கக் கூடியதும் இந்த கோவில்தான்.

1. மேஷம்:

மேஷம் ராசியில் ராகு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உள்ளார். இதனால் பொருளாதாரம் மேம்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். பதவி உயர்வு உண்டாகும். மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிறைய உண்டாகும்.

2. கன்னி:

கன்னி ராசிக்கு ஏழாவது இடத்தில் இருந்த ராகு பகவான் ஆறாவது இடத்திற்கு வந்துள்ளார். எனவே வாழ்க்கை சிறப்பானதாக மாறும். ஆறில் ராகு இருந்து கேந்திரத்தில் குரு இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும். இந்த யோகமானது குரு பெயர்ச்சிக்கு பிறகு இந்த ராசிக்காரர்களுக்கு செயல்படும். அதே சமயம் கேது பகவான் 12 வது இடத்தில் சஞ்சரித்து உள்ளார். இதனால் விரயம் அதிகரிக்கும்.

எனவே இதனை சுப விரயமாக மாற்றிக் கொள்வது நல்லது. பொருளாதார நிலையில் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

3. தனுசு:

தனுசு ராசிக்கு ராகு வெற்றி ஸ்தானம் என்கின்ற மூன்றாவது இடத்தில் சஞ்சரித்து உள்ளார். அதே சமயம் கேது பகவான் ஒன்பதாவது இடத்திற்கு வந்துள்ளார். சுமார் ஒன்றரை வருடத்திற்கு ராகுவும் கேதுவும் இதே இடத்தில் இருந்து பலன்களை தரவிருக்கிறார். மேலும் ராகு பகவான் முன்னேற்றத்தை வாரி வழங்க போகிறார். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

இதேபோன்று கடக ராசிக்கு அஷ்டம ராகு, கும்ப ராசிக்கு ஜென்ம ராகு, மகரம் ராசிக்கு அஷ்டம கேது, சிம்ம ராசிக்கு ஜென்ம கேது என இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் நாக சாந்தி செய்து கொள்வது நல்லது.