ஒமைக்ரான் நோய்த்தொற்று அமெரிக்கா பல்கலைக்கழகம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Photo of author

By Sakthi

சென்ற மாதம் உருமாறிய நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. தற்சமயம் இந்தியா உட்பட 106 நாடுகளில் இந்த நோய்த்தொற்று பரவல் ஊடுருவி இருக்கிறது.

இந்த புதிய வகை நோய் தொற்றால் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து இருக்கிறார்கள். இந்தநிலையில், இந்த புதிய வகை நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் உலகமெங்கும் 300 கோடி நபர்களுக்கு என்ற புதிய வகை நோய் தொற்று பாதிப்பு உண்டாகும் என்றும், தினசரி பாதிப்பு மூன்றரை கோடி நபர்களுக்கு ஏற்படும் என்றும், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் இன்ஸ்டிடியூட் கணித்து இருக்கிறது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 2 மாதங்களில் சுமார் 300 கோடி நோய்த்தொற்றுகள் உண்டாகும் என்று ஆராய்ச்சி கணிப்பு தெரிவிக்கிறது. ஜனவரி மாதத்தின் மத்தியில் நோய்த்தொற்று உச்சமடையும். அப்போது நாள்தோறும் மூன்றரை கோடி நபர்களுக்கு பாதிப்பு உண்டாகும், ஏப்ரல் மாதத்தில் டெல்டா அலை உச்சத்தை விட இது மூன்று மடங்கு அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம் இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு மருத்துவமனை சேர்க்கையை ஒப்பிட்டு பார்க்கும் போது 90 முதல் 96 சதவீதம் குறைவாக இருக்கும். பலி எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 97 முதல் 99 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.