காஞ்சிபுரம் மாவட்டத்தில் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து… 3000 கோழிக் குஞ்சுகள் பலியானதாக தகவல்!!

0
172

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து… 3000 கோழிக் குஞ்சுகள் பலியானதாக தகவல்…

 

காஞ்சிபுரம் கோழிப் பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3000 கோழிக் குஞ்சுகள் கருகி பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்து முசரவாக்கம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். ராஜேந்திரன் அவர்கள் முசரவாக்கம் – முத்துவேடு சாலையில் கன்னியம்மன் கோவில் பகுதி அருகே உள்ள அவருடைய சொந்த விவசாய நிலத்தில் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார்.

 

ராஜேந்திரன் அவர்கள் கோழிப் பண்ணையில் 3000 பிராய்லர் கோழிக் குஞ்சுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று(ஆகஸ்ட்10) அதிகாலை பண்ணையின் மேல்கூரையில் திடீரென்று தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

 

கோழி பண்ணையில் தீ பற்றியது பற்றி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீயை போராடி அணைத்தனர்.

 

இருப்பினும் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ பண்ணை முழுவதும் பரவியது.

 

இந்த தீ விபத்தில் 3000 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தது. இன்னும் சில வாரங்களில் விற்பனை செய்யப்படுவதற்காக இந்த கோழிக் குஞ்சுகள் தயார் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் 3000 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Previous articleஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு… எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் சுட்டு கொலை… நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்!!
Next articleகுட் டச், பேட் டச் பற்றி மாணவிகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியை… இந்த கல்வி முக்கியம் என்று கருத்து!!