இதய நோயுடன் உயிருக்கு போராடிய 3000 குழந்தைகள்! உதவி செய்து உயிரை காப்பாற்றிய பின்னணி பாடகி! 

Photo of author

By Sakthi

இதய நோயுடன் உயிருக்கு போராடிய 3000 குழந்தைகள்! உதவி செய்து உயிரை காப்பாற்றிய பின்னணி பாடகி!
இதய நோயுடன் 3000 குழந்தைகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் நிதி திரட்டி கொடுத்து பிரபல பின்னணி பாடகி பாலக் முச்சல் அந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்ற உதவி செய்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி பாலக் முச்சல் அவர்கள் பாடலாசிரியராகவும் இருந்து வருகின்றார். இவரும் இவருடைய சகோதர் பாலாஷ் முச்சல் என்பவுரும் இணைந்து இதய நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற இந்தியாவிலும், பல வெளிநாடுகளில் மேடை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டி வருகின்றார். இவருடைய இந்த சமூக சேவைக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
அந்த வகையில் பின்னணி பாடகி பாலக் முச்சல் அவர்கள் சேவிங் லிட்டில் ஹார்ட்ஸ் என்ற நிதி திரட்டும் நிறுவனத்துடன் சேர்ந்து நிதி திரட்டி கொடுத்து 3000 குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். மேலும் நிதி கொடுத்த அனைவருக்கும் நன்றியும் தெறிவித்துள்ளார்.
இது குறித்து பின்னணி பாடகி பாலக் முச்சல் அவர்கள் “நான் இசைக் கச்சேரி நடத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தி வருகின்றேன். இன்னும் 413 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அது தான் என்னுடைய வாழ்க்கையின் லட்சியம் ஆகும். அண்மையில் இதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுவன் அலோக் அவர்களின் வீடியோவை பகிர்ந்து அச்சிறுவனுக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி ” என்று கூறியுள்ளார்.
அப்பொழுது பேசும் பொழுது கார்கில் வீரர்களுக்காக தெருக்களில் பாடி நிதி திரட்டிய அனுபவத்தையும் இவர் பகிர்ந்து கொண்டார். இவருடைய இந்த சமூக சேவைகள் கின்னஸ் புத்தகத்தில் மட்டுமில்லாமல் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்திய அரசும் இன்னும் பல நிறுவனங்களும் இவருக்கு விருதுகள் வழங்கி பாராட்டியுள்ளது.